search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பெரியவாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் நோயாளிகள்

    பிரசவத்தின்போது இறுதிக்கட்டத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் பெரியவாளவாடியில் இருந்து உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டியது உள்ளது.
    உடுமலை:

    உடுமலையை அடுத்த பெரியவாளவாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    ஆனால் பிரசவம், விபத்து போன்ற சிக்கலான தருணங்களில் அவசர கால சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், -

    பெரியவாளவாடியைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  சிகிச்சைக்காக வருகின்றனர். சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு சிகிச்சையும் முதலுதவியும் அளிக்கப்படுகிறது. 

    இயற்கை முறையில் பிரசவமும் நடைபெற்று வருகிறது. ஆனால் பிரசவத்தின்போது இறுதிக்கட்டத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இங்கிருந்து உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. 

    அதேபோன்று எலும்பு முறிவு, பெரும் விபத்துக்களில் சிக்கும் நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 

    எனவே பெரியவாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி கூடுதல் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். அத்துடன் ஆஸ்பத்திரிக்கு அருகே உள்ள காலி இடத்தில் அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய கட்டிடத்தை கட்டுவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  
    Next Story
    ×