search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டு போட வரிசையில் நிற்கும் மக்கள்
    X
    ஓட்டு போட வரிசையில் நிற்கும் மக்கள்

    ஊரக உள்ளாட்சித் தேர்தல்- 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது

    கிராம பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு பொதுமக்கள் தனித்தனியாக வாக்குகளை செலுத்தினர்.
    சென்னை:

    தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் 14,662 பதவிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அன்று 77.43 சதவீத ஓட்டுக்கள் பதிவானது.

    இந்த 9 மாவட்டங்களிலும் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி, 1,324 பஞ்சாயத்து தலைவர் பதவி, 10,329 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என மொத்தம் 12,341 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 6,652 வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர். 

    கிராம பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு தனித்தனியாக வாக்குகளை செலுத்தினர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.34 % வாக்குகள் பதிவாகியிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 6 மணிக்கு வரிசையில் காத்திருந்தவர்கள் வாக்களிக்க  அனுமதி அளிக்கப்பட்டது.

    வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் 74 மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த மையங்களில் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகிற 12-ந்தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.

    Next Story
    ×