search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    கோவையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

    கோவை மாவட்டத்தில் வரத்து குறைவால் தக்காளி கிலோ ரூ.40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்பட கிராமபுறங்களில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் உட்பட காய்கறிகளை பயிரிட்டு உள்ளனர்.

    புரட்டாசி மாதம் என்பதால் தக்காளி அதிகளவில் விளைச்சல் ஏற்படும். இந்த தக்காளியை கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, எம்ஜிஆர் மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு மொத்த விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருவார்கள். இங்கு மொத்த வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்வார்கள். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் தக்காளிகள் செடியிலேயே அழுகி விடுகின்றன.

    மேலும் குளிரினால் அதிகமான தக்காளிகளை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

    இதனால் தக்காளி வரத்து குறைய தொடங்கியுள்ளது. விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தக்காளியை குறைந்த விலைக்கு ஏலத்திற்கு கொடுத்து செல்கின்றனர். ஆனால் வியாபாரிகளிடம் தக்காளி செல்லும்போது விலை கிடுகிடு என உயர்ந்து விடுகிறது.

    கடந்த வாரங்களில் வியாபாரிகள் தக்காளியை 10 ரூபாய்க்கு விற்று வந்தனர். ஆனால் தற்போது வரத்து குறைவால் தக்காளி கிலோ ரூ.40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    Next Story
    ×