search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.
    X
    பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    திருப்பூரில் இன்று பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

    கொரோனா காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்ததால் தனியார் பள்ளி வாகனங்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் 9 முதல் 12 - ம்வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 1- ந்தேதி முதல் 1முதல் 8 - ம்வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.  

    இதையடுத்து பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கொரோனா காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக  திறக்கப்படாமல் இருந்ததால் தனியார் பள்ளி  வாகனங்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 1 - ந்தேதி முதல் அந்த வாகனங்கள் அனைத்தும் இயக்கப்பட உள்ளன. 

    இதையடுத்து வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து இன்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் அனைத்தும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அந்த வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெகநாதன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ், போக்குவரத்து அதிகாரிகள் ஜெயதேவராஜ், வெங்கட்ரமணி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். பள்ளி வாகனங்கள் சரியாக இயங்குகிறதா? பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.  

    மேலும் மாணவர்களை எப்படி பாதுகாப்பாக ஏற்றி செல்வது என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை டிரைவர்களுக்கு அதிகாரிகள் வழங்கினர். 

    தீயணைப்பு துறை அதிகாரி பாஸ்கரன், தீ விபத்தின் போது எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்துசெயல்முறை விளக்கம் அளித்தார்.  
    Next Story
    ×