search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    போடிப்பட்டி ஊராட்சியில் கழிவுகளை உரமாக்கும் திட்டத்திற்கு தீவிர நடவடிக்கை

    போடிபட்டி ஊராட்சியில், 4,300 வீடுகள் உள்ளன. இங்கு13 தூய்மைப் பணியாளர்கள் உள்ள நிலையில் 150 வீடுகளுக்கு ஒருவர் வீதம் குப்பை சேகரம் செய்கின்றனர்.
    உடுமலை:

    உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சியில் 3 வெவ்வேறு இடங்களில் உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக வீடுகள், ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து குப்பைகள் பிரித்து பெறப்படவுள்ளது. 

    வாரத்தில் 6 நாட்கள் மட்டும் மக்கும் குப்பை, ஒரு நாள் மக்காத குப்பையை சேகரம் செய்ய கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீடுகளிலேயே குப்பையை வகை  பிரித்து சேமித்து வைக்க பச்சை மற்றும் சிவப்பு நிறக்கூடைகள் வினியோகம் செய்யப்படவுள்ளன.

    இதுகுறித்து ஊராட்சித்தலைவர் சவுந்தர்ராஜன் கூறியதாவது: 

    போடிபட்டி ஊராட்சியில், 4,300 வீடுகள் உள்ளன. இங்கு 13 தூய்மைப் பணியாளர்கள் உள்ள நிலையில் 150 வீடுகளுக்கு ஒருவர் வீதம் குப்பை சேகரம் செய்கின்றனர். தற்போது கூடுதலாக  26 பேரை தற்காலிகமாக நியமிக்க ஒன்றிய அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது. 

    அதன்படி வீடுகளில், மறுசுழற்சி செய்வதற்கு ஏதுவாக உணவு கழிவுகள், சாப்பிட பயன்படுத்தப்பட்ட வாழை இலைகள் உள்ளிட்ட மக்கும் தன்மையுடைய குப்பையை பச்சை நிறக்கூடையில் சேமித்து வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட மக்காத குப்பைகளை சிவப்பு நிறக்கூடையில் சேமித்து வைக்க வேண்டும். 

    இவ்வாறு செய்தால் மட்டுமே குப்பையை எளிதாக பெற்று, உடனடியாக மறுசுழற்சிக்கு அனுப்ப முடியும். திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×