
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்பு விளையை சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர் அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.நேற்று இவர் அனுமதி இல்லாமல் அந்த பகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்து, போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து திசையன்விளை போலீசார் சுயேட்சை வேட்பாளர் முருகேஸ்வரி மீது அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.