search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    55 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

    தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்துள்ளது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. முழுகொள்ளளவான 71 அடியில் 69 அடிவரை தண்ணீர் தேக்கப்படுகிறது. பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    அணையின் நீர்மட்டம் 55.18 அடியாக உயர்ந்துள்ளது. 1605 கனஅடிநீர் வருகிறது. பாசனம் மற்றும் மதுரை குடிநீருக்காக 719 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 128.45 அடியாக உள்ளது. 1309 கனஅடிநீர் வருகிறது. 1300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 60 கனஅடிநீர் முழுமையாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.80 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 197 கனஅடிநீர் உபரியாக திறக்கப்படுகிறது.

    பெரியாறு 6, தேக்கடி 3, சண்முகாநதி அணை 2.3, வைகை அணை 10.6, கொடைக்கானல் 0.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் மும்முரமடைந்துள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அடுத்தமாதம் 2-ம் போக நெல்சாகுபடி தொடங்க உள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×