search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவேக்சின் தடுப்பூசி
    X
    கோவேக்சின் தடுப்பூசி

    மேலும் 6 லட்சம் தடுப்பூசி இன்று சென்னை வந்தன

    35 ஆயிரம் சிறப்பு முகாம்களுக்கு தேவையான தடுப்பூசிகளை இருப்பு வைக்க சுகாதாரத்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 4 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு திட்டமிட்ட அளவைவிட தடுப்பூசிகள் அதிக அளவு செலுத்தப்பட்டுள்ளது.

    அதனால் இந்த மாதமும் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. வருகிற 10-ந்தேதி 5-வது கட்டமாக சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களில் 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 20 லட்சம் பேருக்கு மேல் 2-வது தவணை தவறியவர்கள் இருப்பதாக தெரிய வருகிறது.

    இதனால் அவர்களை இந்த சிறப்பு முகாம்களுக்கு கொண்டுவர சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முகாமிற்கு தேவையான அளவு தடுப்பூசி இருப்பு வைக்கப்படுகிறது.

    நேற்று முன்தினம் 9 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன. இதையடுத்து இன்று 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.

    இதனை அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை தேவைக்கேற்ப அனுப்பி வருகிறது. 35 ஆயிரம் சிறப்பு முகாம்களுக்கு தேவையான தடுப்பூசிகளை இருப்பு வைக்கவும் சுகாதாரத்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
    Next Story
    ×