search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிகழ்ச்சியில் திருப்பூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் பேசிய காட்சி.
    X
    நிகழ்ச்சியில் திருப்பூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் பேசிய காட்சி.

    வனவிலங்குகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - அதிகாரி அறிவுறுத்தல்

    பிளாஸ்டிக் உபயோகிப்பதால் காடுகளின் நிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து வனத்துறை அதிகாரி எடுத்துரைத்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 , திருப்பூர் வனச்சரகம் மற்றும் திருப்பூர் அரிமா சங்கம் சார்பில் வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமைதாங்கினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

    அவர் பேசுகையில், வனவிலங்குகளின் வாழ்க்கை நிலை, அந்த விலங்குகள் வாழ்நாளில் சந்திக்கும் விளைவுகள் பற்றி கூறினார். மேலும் மாணவர்கள் மக்களிடம் வனவிலங்குகளை அழிக்க கூடாது . 

    அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் மற்றும் பிளாஸ்டிக் உபயோகிப்பதால் காடுகளின் நிலங்கள் பாதிக்கப்படுவது, வனவிலங்குகளுக்கு நேரிடும் விளைவுகளை பற்றியும், வனவிலங்குகளுக்கும் மனிதனுக்கும் இடையே ஏன் மோதல் ஏற்படுகிறது.

    அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார் அரிமா சங்க செயலர் பொன்மூர்த்தி வாழ்த்தி பேசினார்.

    விழா முடிவில் வனவர் உமா மாகேஷஸ்வரி நன்றி கூறினார். 

    நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் ரத்தினகணேஷ், கிருபாகரன், அருள்குமார், பூபாலன், பாலசுப்பிரமணியம், கீர்த்தனா ஆகியோர் தலைமையில் 75 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் கல்லூரி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். 


    Next Story
    ×