search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சேலத்தில் நித்யானந்தா சீடர் மீது தாக்குதல்- 2 பேர் கைது

    சேலத்தில் நித்யானந்தா சீடர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    சேலம்:

    சேலம் அழகாபுரம் பெரிய புதூரில் நித்யானந்தா ஆசிரமம் உள்ளது. இங்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த அவரது சீடர் சந்தீப்(வயது20) என்பவர் உள்ளார். இவர் 10 வயதில் இருந்தே நித்யானந்தாவின் சீடராக உள்ளார்.

    இந்த நிலையில் நித்யானந்தா ஆசிரமத்துக்கு 2 பேர் வந்தனர். அவர்கள் தங்களை வனத்துறை அதிகாரிகள் என கூறினர். மேலும் சந்தீப்பிடம் வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டியுள்ளீர்கள் என கூறியவாறு தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் சந்தீப்பை தாக்கியதுடன் அங்கிருந்த லேப் டாப், ஹெட்போன், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை எடுத்து சென்று விட்டனர். தாக்குதலில் காயம் அடைந்த சந்தீப் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சரவணன்(30), அரியலூரை சேர்ந்த சுப்பிரமணி(35) ஆகியோர்தான் சந்திப்பிடம் வனத்துறையினர் என நாடகமாடி லேப்டாப், ஹார்டு டிஸ்க்கை பறித்து சென்றவர்கள் என தெரியவந்தது. இருவரும் மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இதை தொடர்ந்து அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து ஹெட்போன், ஹார்டு டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்பு அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×