search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,288-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று 3-வது நாளாக தங்கம் விலை உயர்ந்தது.

    சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 288-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 411 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.65 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.20-க்கு விற்கிறது.
    Next Story
    ×