search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
    X
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    குறுக்கு வழியில் வெற்றிபெற தி.மு.க. முயற்சி- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    விதிகளை மீறுவது தி.மு.க.வுக்கு புதிதல்ல என்பதை கடந்த கால வரலாறுகள் சொல்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
    சென்னை:

    முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் தி.மு.க.வினர் ஏஜெண்டுகளை மிரட்டுவது, தடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

    ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவு எதையும் பின்பற்றவில்லை. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    3 அடுக்கு பாதுகாப்பு போட வேண்டும் என்று கூறி இருந்தது. ஆனால் அவ்வாறு செய்யவில்லை. சட்டமன்ற தேர்தலில் கூட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    தற்போது ஒரு குறிப்பிட்ட இடங்களில் தான் தேர்தல் நடந்தது. இதற்கு கேமரா பொருத்தாதது திட்டமிட்ட சதி. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர்
    தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார். 10 முதல் 50 வரை ஓட்டு வித்தியாசம் இருந்தால் தி.மு.க.வை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

    அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. தி.மு.க. விதிகளை மீறுவதில் புதியது அல்ல.

    மு.க.ஸ்டாலின்

    தேர்தல் பிரசாரத்திற்கு சென்றால் வாக்குறுதிகள் பற்றி மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்பதற்காகவே இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உட்பட பலரும் பிரசாரத்திற்கு செல்லவில்லை.

    இப்போது தி.மு.க. வின் சாயம் வெளுத்துவிட்டது. விதிகளை மீறுவது
    தி.மு.க.வுக்கு புதிதல்ல என்பதை கடந்த கால வரலாறுகள் சொல்கின்றன.

    ஆனால் இந்த தேர்தலில் எத்தகைய ஜனநாயக விரோத செயல்களையும் செய்து முடிக்க தி.மு.க. தயாராக உள்ளது.

    இவ்வாறு கூறினார்.

    Next Story
    ×