search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடபழனி முருகன் கோவில்
    X
    வடபழனி முருகன் கோவில்

    வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?- அமைச்சர் சேகர்பாபு தகவல்

    பக்தர்கள் அதிகமாக வரும் 553 திருக்கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அக்கோவில்களில் அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக செய்து முடிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் மற்றும் ஆதிமூல பெருமாள் கோவில் சீரமைப்பு பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆதிமூல பெருமாள் கோவில் முன்பு சாதாரண ஏழை மக்கள் 18 பூக்கடைகளை நடத்தி வந்தனர். கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் இருக்கிறது.

    இருப்பினும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக கோவில் அருகிலேயே மாநகராட்சி பயன்படுத்தி வந்த அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை திரும்ப பெற்று அந்த இடத்தில் கடைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

    வடபழனி முருகன் கோவிலில் 34 திருப்பணிகள் நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பணிகள் நிறைவடைந்து விடும். அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) இறுதியில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    வடபழனி முருகன் கோவில்


    வடபழனி முருகன் கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடத்தப்படுகிறது. எனவே ரூ.16 கோடியில் புதிதாக திருமண மண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. மண்டபம் கட்டுவதற்கான வரைபடம் தயாராகி வருகிறது.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்குவது விரைவில் தொடங்கும்.

    அதே போல் கோவில் குளத்தில் தர்ப்பணம் செய்ய வருபவர்களுக்கு வசதியாக புதிய மண்டபம் ஒன்று கட்டப்படும்.

    வடபழனி கோவில் கோபுர தரிசனம் இடையூறு இல்லாமல் இருப்பதற்காக முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை அகற்றப்படுகிறது.

    ரூ.40 கோடி செலவில் அர்ச்சகர்களுக்கு வீடு கட்டும் பணி விரைவில் தொடங்கும்.

    பக்தர்கள் அதிகமாக வரும் 553 திருக்கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த கோவில்களில் அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக செய்து முடிக்கப்படும்.

    கோவில்கள் அனைத்திலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மட்டுமில்லாமல் கடவுளை தரிசிக்க செல்லும் போது எவ்வித இடையூறும் இல்லாமல், மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் தரிசித்து செல்ல வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் குறைகள் அனைத்தும் களையப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×