search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    வருகிற 7-ந்தேதி முதல் தடையின்றி மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என  ஆணையாளர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் 3-வது குடிநீர் திட்டம் பவானியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 8 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. 

    எனவே திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாளை 6 - ந்தேதி (புதன்கிழமை) குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. வருகிற 7-ந்தேதி முதல் தடையின்றி மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  
    Next Story
    ×