search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    இந்த 3 மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு- வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு

    வடகிழக்கு பருவமழை முன் அறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
    கோவை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஓய்ந்துள்ளது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது.

    இதுகுறித்து வடகிழக்கு பருவமழை முன் அறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    எதிர் வரக்கூடிய 2021-ம் ஆண்டின் வடகிழக்கு பருவமழை காலத்திற்கான (அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பை கொண்டு 2021-ம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

    மழை

    அதன்படி தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சராசரியை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    கோவை, அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சை, தேனி, நீலகிரி, திருச்சி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சராசரி அளவு மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×