search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிப்பு வழிமுறைகள் அறிவிப்பு

    மண்டபம், வணிக வளாகம், ரெயில் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு லிட்டர் லைசால் கிருமிநாசினியை 19 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
    திருப்பூர்:

    கொரோனா தொற்று பரவல் தணிந்தாலும் இன்னும் சமூக இடைவெளி, முககவசம் அணிதலை தொடர்வது கட்டாயமாகியுள்ளது. குறிப்பாக தீபாவளி கூட்ட நெரிசலால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
     
    இந்தநிலையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் தொற்றுப்பரவலை கட்டுக்குள் கொண்டு வர கிருமிநாசினி தெளிப்பது தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி மருத்துவமனை, கிளினிக், தனியார் மருத்துவமனைகளில் ஒரு லிட்டர் லைசால் கிருமிநாசினியை, 9 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஹைப்போகுளோரைடு திரவத்தை ஒரு லிட்டர் அளவுக்கு எடுத்து 3 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

    இக்கலவையை மருத்துவமனை படுக்கை, மேஜை, நாற்காலி, தரை, கைப்பிடி மற்றும் அனைத்து பகுதிகளிலும் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை துடைக்கவோ, ‘ஸ்பிரே’ செய்யவோ வேண்டும்.

    பொது இடங்கள், பஸ், சினிமா தியேட்டர், அலுவலகம், மண்டபம், வணிக வளாகம், ரெயில் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு லிட்டர் லைசால் கிருமிநாசினியை 19 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 

    ஒரு லிட்டர் ஹைப்போ குளோரைடு திரவத்தை 7 லிட்டர் தண்ணீரில் கலந்து இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தெளிக்கவோ, ‘ஸ்பிரே’ செய்யவோ வேண்டும்.

    வீடுகள், தனியார் வாகனங்களில் ஒரு லிட்டர் லைசால் கிருமி நாசினியை 49 லிட்டர்  தண்ணீரில் கலந்தும் ஒரு லிட்டர் ஹைப்போ குளோரைடு திரவத்தை 19 லிட்டர்  தண்ணீரில் கலந்தும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தரை மற்றும் பொருட்களை துடைக்கவோ, ஸ்பிரே செய்யவோ வேண்டும்.

    தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் இந்த வழிகாட்டுதலை உள்ளாட்சி அமைப்புகள் சரியாக பின்பற்றி வந்தன. நாளடைவில் இத்தகைய தொற்று தடுப்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பண்டிகைக்காலம் நெருங்குவதால் இது கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 
    Next Story
    ×