search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    சாலைப்பணி தாமதத்தை கண்டித்து பொதுமக்கள் மீண்டும் மறியல் - பல்லடம் அருகே பரபரப்பு

    சாலை அமைக்கும் வேலையை ஆரம்பித்து 3 மாதங்களுக்கு மேலாக ஆகிறது. சாலையை தோண்டி ஜல்லி கற்கள் போட்டவுடன் வேலையை நிறுத்தி விட்டனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் முதல் - தொட்டி அப்புச்சி கோவில் வரை ரோடு போடும் பணி நடந்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. 

    சாலை தோண்டப்பட்டு, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. அதன்பின்பு கிடப்பில் போடப்பட்டது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், ஜல்லி கற்கள் மீது செல்லும் போது நிலை தடுமாறி விழுந்து பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    சாலை அமைக்கும் வேலையை ஆரம்பித்து 3 மாதங்களுக்கு மேலாக 
    ஆகிறது. சாலையை தோண்டி ஜல்லி கற்கள் போட்டவுடன் வேலையை நிறுத்தி விட்டனர். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஜல்லி கற்கள் மீது செல்லும் போது நிலை தடுமாறி விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். 

    கடந்த மாதத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தார். இதேபோல கடந்த சிலநாட்களுக்கு முன் இரண்டு சக்கர வாகனம் ஓட்டி வந்த முதியவர் வாய்க்காலில் விழுந்து காயங்களுடன் தவித்தார். 

    அவரை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் வாய்க்காலுக்குள் இறங்கி மீட்டார். எனவே இது போல் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை போடும் வேலையை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

    இதனை வலியுறுத்தி கடந்த 30 - ந்தேதி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து வந்த பல்லடம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இன்று தார் போட்டு சாலை போடப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை சாலை போடும் பணி நடைபெறவில்லை. இதனை கண்டித்து சுமார் 50 - க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
    Next Story
    ×