search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    கோவையில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு

    கோவை, நீலகிரியிலும் தொடர்ந்து 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கோவை எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்து காணப்படுகிறது.
    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வெங்காயம், தக்காளி, அவரைக்காய், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    இதுதவிர ஊட்டியில் இருந்து உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன.

    இதனை வாங்கவும் கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், கோவை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் வருகின்றனர்.

    தற்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலுமே பரவலாக மழை பெய்து வருகிறது.

    கோவை, நீலகிரியிலும் தொடர்ந்து 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கோவை எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்து காணப்படுகிறது. கடந்தவாரம் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையான தக்காளி இன்று ரூ.36க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.60க்கும், ரூ.30க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.40க்கு விற்பனையானது.

    கோவையில் இன்று விற்கப்படும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    வெங்காயம்-ரூ.30, பெரிய வெங்காயம்-ரூ.30, அவரைக்காய்-ரூ.60, முருங்கைக்காய்-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ.30, இஞ்சி-ரூ.50, தக்காளி-ரூ.36, ஆப்பிள் தக்காளி-ரூ.50, காலி பிளவர்-ரூ.35, கோவக்காய்-ரூ.15, பூசணிகாய்-ரூ.15, முட்டைகோஸ்-ரூ.12, மிளகாய்-ரூ.30, பீட்ரூட்-ரூ.24, கேரட்-ரூ.60, பீன்ஸ்-ரூ.40, வெள்ளரிக்காய்-ரூ.20, முள்ளங்கி-ரூ.23, சினிசுவரக்காய்-ரூ.36, வெண்டைக்காய்-ரூ.46, பாகற்காய்-ரூ.40, புடலங்காய்-ரூ.26, கத்தரிக்காய்-ரூ.40, சுரக்காய்-ரூ.60, பீர்க்கங்காய்-ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக காய்கறிகள் வரும்போது அழுகி விடுகின்றன. வரத்தும் குறைந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது என்றார்.
    Next Story
    ×