search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    டெல்டா மாவட்டங்களில் 4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

    3-ந்தேதி புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.

    4-ந்தேதி தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னனுடன் கன முதல் மிக கனமழையும் சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

    மழை


    5-ந்தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யும்.

    சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மணமேல் குடி 10செ.மீ, சிவகங்கை, புலிபட்டி தலா 12 செ.மீ, வத்தலை அணை, நத்தம் தலா 11 செ.மீ, பவானி, பெரம்பலூர் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



    Next Story
    ×