
தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 36). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த பால் முத்தையா (42) என்பவர் சென்று குடிநீர் பாட்டில் மற்றும் டம்ளர் வாங்கியுள்ளார். அதற்கு பணம் கொடுக்காததால், மகாலட்சுமி பணம் கேட்டார். அப்போது பால் முத்தையா அவரை அவதூறாக பேசி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து மகாலட்சுமி தேவர்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் முத்தையாவை கைது செய்தனர்.