என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  தஞ்சை மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தஞ்சை:

  கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்தவர் ராமு மகன் உச்சாணி என்கின்ற விமல் (வயது25), இவர் கும்பகோணத்திற்கு சுற்றுலா வருவோரிடம் மற்றும் பெண்களிடம் செயின் பறிப்பது, செல்போன் திருடுவது, கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பு போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

  இவர்மீது கும்பகோணம், சாக்கோட்டை, திருவிடைமருதூர், நாச்சியார் கோவில், உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது. இவரை பிடிக்க ரவளி பிரியா எஸ்.பி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

  நாச்சியார்கோவில் அருகே விமல் நின்றிருந்தபோது போலீசார் பிடிக்க முயன்ற போது அரிவாளை காட்டி வெட்டி விடுவதாக மிரட்டி உள்ளார். சுதாரித்துக்கொண்ட போலீசார் அவரை சுற்றி வளைத்த ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்ததில் விமலுக்கு கை முறிந்தது.

  அதேபோல் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஆட்டோ பாலா என்பவர் ஆட்டோவில் தனியாக வரும் பயணிகளிடம், பெண்களிடமும் வழிபறியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிந்தது. அவர் ஆட்டோவில் சென்றபோது போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பி ஓட முயன்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவருடைய கால் ஒடிந்தது.இருவரையும் மீட்ட போலீசார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பல நாட்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த 2 வழிப்பறி திருடர்கள் பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

  Next Story
  ×