search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    5 தமிழ் வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை கைவிட வேண்டும்- மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை

    திருச்சி, நெல்லை, கோவை, மதுரை, புதுச்சேரி ஆகிய 5 தமிழ் வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவையில் உள்ள வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சி தயாரிப்பை இம்மாதத்துடன் முடக்க பிரச்சார் பாரதி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன.

    இதுவரை தங்களின் ஒலிபரப்பு எல்லைக்குட்பட்ட பகுதிகள் சார்ந்த நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரித்து ஒலிபரப்பி வந்த இந்த நிலையங்கள், இனி சென்னை வானொலி நிலையம் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சிகளை மட்டும் தொடர் ஒலிபரப்பு செய்யும்;

    இவை தவிர சென்னை வானொலி நிலையத்தால் ஒதுக்கப்படும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் இவை சொந்தமாக நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பும். இந்த நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருவதாகக் கூறப்படுகிறது.

    மண்டல வானொலிகள் மூலம் வழங்கப்படும் வேளாண் தொழில் சார்ந்த வழிக்காட்டுதல் நிறுத்தப்பட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். பிரச்சார் பாரதி மூலம் நடத்தப்படும் மண்டல வானொலிகளின் இடத்தை வணிக நோக்கம் கொண்ட தனியார் பண்பலை வானொலிகளால் நிரப்ப முடியாது. இவற்றையெல்லாம் பிரச்சார் பாரதி கருத்தில் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு குடியிருப்பிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களிலும் சமுதாய வானொலிகள் நிறுவப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் மண்டல வானொலிகளின் நிகழ்ச்சிகளை முடக்கி விட்டு சென்னை வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது தவறு.

    எனவே, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, புதுச்சேரி வானொலிகளை முடக்கும் முடிவை பிரச்சார் பாரதி கைவிட வேண்டும். அவை வழக்கம் போல தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×