என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஆரோக்கியத்தை வலியுறுத்தி பெண்களுக்கான சைக்கிள் பயணம்-1ந்தேதி நடக்கிறது
அவிநாசி சாலையில் உள்ள பிரைம் என்கிளேவ் குடியிருப்பு வளாகத்தில் மாலை 4 மணி அளவில் வீதி விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருப்பூர்:
திருப்பூர்மாநகராட்சி சார்பில் ஆரோக்கியத்தை வலியுறுத்தி பெண்களுக்கான சைக்கிள் பயணம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
75-வது சுதந்திர தினத்தையொட்டி, திருப்பூர் மாநகராட்சி சார்பில் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கான சைக்கிள் பயணம் வரும் வருகிற1-ந்தேதி காலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.
திருப்பூர்மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி அவிநாசி சாலை, தீயணைப்பு நிலையம், பி.என்.சாலை வழியாக 8 கிலோ மீட்டர்சென்று விட்டு மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தை வந்தடைகிறது.
இதைத்தொடர்ந்து, அவிநாசி சாலையில் உள்ள பிரைம் என்கிளேவ் குடியிருப்பு வளாகத்தில் மாலை 4 மணி அளவில் வீதி விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story