search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முற்றுகை
    X
    முற்றுகை

    கூடலூரில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை

    கூடலூர் நகர பகுதிக்கு மட்டும் தனியாக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அங்கு புதிய குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் இரண்டு நாட்களில் முடிந்து விடும்.

    கூடலூர்:

    கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையேகூட்டுக் குடிநீர் நீரேற்று நிலையத்தில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு குடிநீர் வடிகால் வாரியத்துறையினர் மூலம் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் கூடலூர் நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் செய்வதில் தொய்வு ஏற்பட்டது. மேலும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 2, 3 மற்றும் 4வது வார்டு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இது குறித்து அறிந்த நகராட்சி ஆணையாளர் சேகர் குடிநீர் கேட்டு வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கூட்டுக் குடிநீர் நீரேற்று நிலையத்தில் கூடலூர் நகர பகுதிக்கு மட்டும் தனியாக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அங்கு புதிய குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் இரண்டு நாட்களில் முடிந்து விடும்.

    அதன் பிறகு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும். தற்போது பழைய குடிநீர் குழாய் இணைப்பு வழியாக சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் கலங்கலாக வருவதால் பொதுமக்கள் காய்ச்சி குடிக்க வேண்டும் என்றார். இதையடுத்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×