search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    போலி உணவு பொருட்கள் விற்பனை - அதிகாரி எச்சரிக்கை

    கலப்படம் இருப்பது தெரியவந்தால் ‘சாம்பிள்’ அனுப்பிய செலவு, கோர்ட்டு செலவை அரசே ஏற்கும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை பேசியதாவது:

    நுகர்வோர் பயன்படுத்தும் உணவு பொருளில் கலப்படம் இருப்பதாக கருதினால் ‘சாம்பிள்’ எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்ப நுகர்வோர் அமைப்புக்கு உரிமை உள்ளது. கலப்படம் இருப்பது தெரியவந்தால் ‘சாம்பிள்’ அனுப்பிய செலவு, கோர்ட்டு செலவை அரசே ஏற்கும். பாரம்பரியமான இயற்கை உணவு என்ற பெயரிலும் போலி உணவு பொருள் விற்கப்படுகிறது. 

    பாரம்பரிய உணவு என்பதற்கான ‘லோகா’ இருக்கிறதா? என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். நுகர்வோர் ‘பேக்கிங்’ பொருட்களை வாங்கும் போது, காலாவதி தேதி, முகவரி உள்ளிட்ட 12 அம்சங்களை சரிபார்த்து வாங்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×