search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ம.க.வினர் மனு கொடுத்த காட்சி.
    X
    பா.ம.க.வினர் மனு கொடுத்த காட்சி.

    குடிநீர், சாலை சீரமைப்பு - மாநகராட்சி கமிஷனரிடம் பா.ம.க.வினர் மனு

    திருப்பூர் மாநகராட்சியில் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக இருப்பதால் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன.
    திருப்பூர்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆனந்த், மணிக்கண்ணன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள அனைத்து (60) வார்டுகளிலும் குடிநீர் முறையாக வழங்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதிலும் குறிப்பாக 12 மற்றும் 13ம் வார்டு பகுதிகளில் பொதுமக்கள் குடிநீருக்காக சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருக்கின்றனர்.

    மேலும் திருப்பூர் மாநகராட்சியில் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக இருப்பதால் சாலை விபத்துகள் அதிகமாக நடைப்பெறுகின்றன. எனவே போர்கால அடிப்படையில் சாலையில் உள்ள குழிகளை சரி செய்ய வேண்டும். மேலும் குடிநீர் வாரத்திற்கு மூன்று முறை வருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகளை ஆணையாளர் அவர்கள் உடனடியாக தீர்த்து வைக்குமாறு திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள்கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். 
    Next Story
    ×