search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு: பொன்னேரியில் ரெயில் மறியல் - 200 பேர் கைது

    பொன்னேரி போலீசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்தனர்.இதனால் மின்சார ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    மத்திய அரசின் புதிய 3 வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று நாடுமுழுவதும் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பொன்னேரி ரெயில் நிலையத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு, தி.மு.க., ம.தி.மு.க .காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    அவர்கள் சென்னையில் இருந்து கும்மிடிபூண்டி நோக்கி சென்ற மின்சார ரயிலை மறித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுகுமாரன், நகர செயலாளர் விஸ்வநாதன், காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் கார்த்திகேயன், மாவட்ட பொதுச்செயலாளர் கோவர்தனன், ம.தி.மு.க. எழிலரசன், கம்யூனிஸ்ட் மாநில விவசாய சங்க துணைத்தலைவர் துளசி நாராயணன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி போலீசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்தனர்.இதனால் மின்சார ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    திருத்தணி ரெயில் நிலையத்தில் கம்யூனிஸ்ட்டு, தி.மு.க. கட்சி பிரமுகர்கள் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக காலை 10 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு நின்றிருந்த மின்சார ரெயிலை முற்றுகையிட்டு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் ரெயில் மறியலை கைவிட்டு ரெயில் நிலையம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

    திருவள்ளூர் உழவர் சந்தை அருகே ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் மயில்வாகனன், ஏ. என்.டி .யு .சி. மாவட்ட செயலாளர் ஜெயபால், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், எல்.பி.எஃப். மாவட்ட தலைவர் பாலாஜி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பின்னர் திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலை உழவர் சந்தை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அவைத்தலைவர் திராவிட பக்தன் ஆதிசே‌ஷன், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன், போலிவாக்கும் நாகராஜ், சிபிஎம் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×