search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவொற்றியூரில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை - கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது

    திருவொற்றியூரில் வீட்டுக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவெற்றியூர்:

    எண்ணூர் நேதாஜி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). இவர் மீது கொலை முயற்சி உள்பட 12 வழக்குகள் உள்ளன. தற்போது ஆறுமுகம் திருந்தி வாழ்ந்து ஆட்டோ ஓட்டி வந்தார்.

    இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு அவர் வீட்டை பூட்டிவிட்டு தூங்கினர். அருகில் உள்ள வீட்டில் அவரது தாய் சரோஜா மற்றும் உறவினர்கள் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 5 பேர் கும்பல் ஆறுமுகத்தின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டின் வெளியே நின்றபடி ஆறுமுகத்தை அழைத்தனர்.

    இதனால் பயந்துபோன ஆறுமுகம் தனது செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

    அதற்குள் அரிவாள், கத்தியுடன் நின்ற கும்பல் திடீரென வீட்டின் பக்கவாட்டில் இருந்த ஆஸ் பெஸ்டாஸ் ஷீட்டை உடைத்து கொண்டு வீட்டுக்குள் புகுந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், கூச்சலிட்டார். வீடு பூட்டப்பட்டு இருந்ததால் அவரால் வெளியே தப்பிச்செல்ல முடியவில்லை.

    அவரை சுற்றிவளைத்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    எனினும் ஆத்திரம் அடைந்த கொலைவெறி கும்பல் அருகில் கிடந்த கல்லை ஆறுமுகத்தின் தலைமீது போட்டனர்.

    இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து ஆறுமுகத்தின் தாய் சரோஜா மற்றும் உறவினர்கள் கொலையாளிகளை பிடிக்க முயன்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவர்கள் மீது காலி மதுபாட்டில்களை வீசி உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    ஆறுமுகத்தின் உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு ஆறுமுகம் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீ சார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆறுமுகத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களால் அவர் தீர்த்துக்கட்டப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக அதே பகுதியைசேர்ந்த கிலிண்டன், ஜெயக்குமார், பியான் வினோத், தேசப்பன் மற்றும் 17 வயதான சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் 17 வயது சிறுவன் அவர் செஞ்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இதேபோல் ஜெயக்குமார் திருவொற் றியூரில் உள்ள ஐ.டி.ஐ.யில் ஆட்டோ மொபைல் படிக்கிறார். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×