search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி முகாம்
    X
    தடுப்பூசி முகாம்

    தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

    அ.தி.மு.க. ஆட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து போதுமான அளவிற்கு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை மா. சுப்பிரமணியன் விமர்சனம் எழுப்பியுள்ளார்.
    தஞ்சை மாவட்டத்தில் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 745 இடங்களில் நடைபெற்றது. தஞ்சை அடுத்த முன்னையம்பட்டியில் நடைபெற்ற 3-வது மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘மத்திய அரசிடமிருந்து பணம் செலுத்தி இதுவரை 4 கோடியே 19 லட்சத்து 26 ஆயிரத்து 769 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 52 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கவில்லை. 115 கோடி தடுப்பூசிகள் இந்தியாவிற்கே தேவைப்படும்போது இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பது ஏற்க இயலாதது. அ.தி.மு.க. ஆட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து போதுமான அளவிற்கு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை’’ என்றார்.
    Next Story
    ×