search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்.
    X
    திருப்பூரில் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்.

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று 3-ம் கட்டமாக 672 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

    நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
     
    இதனால் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் 953 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று 672 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அனைத்து மையங்களிலும் காலை 7 மணிக்கு முகாம் தொடங்கியது. மாவட் டத்திற்குட்பட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலு வலகம், ரெயில் நிலையம், பஸ்  நிலையம், சுங்கச்சாவடி மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் முகாம் நடைபெற்றது.

    தடுப்பூசி பணியில் பல்வேறு அரசுத்துறை  பணி யாளர்கள், தன்னார்வலர் என 2,688 பேர் ஈடுபட்டனர். ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி இணையதளத்தில் பதிவு செய்ய வசதியாக தன்னார்வ இளைஞர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் செல்போன் வாயிலாக பதிவு பணியை மேற்கொண்டனர்.

    சிறப்பு தடுப்பூசி முகாமில் 80 ஆயிரத்து 210 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ந்தேதி நடந்த முகாமில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 163 பேருக்கும், 2-ம் கட்டமாக 19-ந்தேதி நடந்த முகாமில் 89 ஆயிரத்து 379 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    முகாமில் காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும் சுகாதார பணியாளர்கள் முகாம் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த வருமாறு அழைப்பு விடுத்தனர். முக்கிய இடங்களில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
    Next Story
    ×