search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    தாராபுரம் காய்கறி மார்க்கெட்டில் விவசாயிகள் போராட்டம்

    தாராபுரம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் விவசாயிகள் வியாபாரம் செய்வதற்கு தகுந்த இடம் ஒதுக்கப்படவில்லை.
    தாராபுரம்:

    தாராபுரம் காய்கறி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளுக்கு அதிகப்படியான சுங்க வரி கேட்பதாக கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழக விவசாய அணி கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார் கூறியதாவது:-

    தாராபுரம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் விவசாயிகள் வியாபாரம் செய்வதற்கு தகுந்த இடம் ஒதுக்கப்படவில்லை. இருந்தும் விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் கத்திரி,வெண்டை, சின்ன வெங்காயம், தக்காளி உட்பட அனைத்துவித காய்கறிகளுக்கும் சிறிய பை ஒன்றுக்கு 5 ரூபாய் வசூல் செய்த வந்த நிலையில் இப்போது 10 ரூபாய் கேட்டு நகராட்சி ஏலம் எடுத்தவர்கள் அடாவடி வசூல் செய்கின்றனர்.

    விவசாய விளைபொருட்கள் அழுகிவிடும் சூழ்நிலையில், வியாபாரிகள் காய்களை வாங்காத போது நாங்கள் நேரடியாக விற்பனை செய்ய எங்களுக்கு இடம் ஒதுக்கி தர நகராட்சி நிர்வாகம் இதுவரை முயற்சி செய்யவில்லை. மீறி நாங்கள் சாலைகளில் கடைகள் அமைக்கும் போது போலீசார் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என கூறி அகற்றி விடுகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் விவசாயியின் விளைபொருள்களை எங்கே சென்று விற்பது  என்று தெரியவில்லை. எனவே விவசாயிகளுக்கு காய்கறி மார்க்கெட்டில் இடம் ஒதுக்கி தந்து உரிய பாதுகாப்பு  வழங்க வேண்டும் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேசிய உதவி ஆய்வாளர்கள் முருகேசன் மற்றும் இயேசு ராஜ், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×