search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கறிக்கோழி
    X
    கறிக்கோழி

    புரட்டாசி மாதத்தால் பல்லடத்தில் கறிக்கோழி விற்பனை வீழ்ச்சி

    கறிக்கோழி நுகர்வை பொறுத்து விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கோழிப்பண்ணை தொழில் உள்ளது. இங்கு முட்டைக்காகவும், இறைச்சி க்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. 

    இங்கிருந்து தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நா டகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    கறிக்கோழி நுகர்வை பொறுத்து விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக சீராக இருந்த கறிக்கோழி விற்பனை தற்போது புரட்டாசி மாதம் என்பதால் குறைந்துள்ளது. இதுகுறித்து பண்ணையாளர் ஒருவர் கூறியதாவது:-

    பல்லடம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் பண்ணை தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள்,சோளம், ராகி பயிரிடும் விவசாயிகள், கறிக்கோழி பண்ணை அமைக்கும் தொழிலாளர்கள் என நேரிடையாகவும், மறை முகமாகவும் பல லட்சம்பேர் இந்தத்தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.

    புரட்டாசி மாதத்தில் மக்கள் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதால்  இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாக கறிக்கோழி விற்பனை குறைந்துள்ளது. புரட்டாசி மாதம் முடிந்த பிறகு கறிக்கோழி விற்பனை சூடு பிடிக்கும் என்றார்.
    Next Story
    ×