என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  கபிஸ்தலம் அருகே வி‌ஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கபிஸ்தலம் அருகே வி‌ஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கபிஸ்தலம்:

  கபிஸ்தலம் அருகே உள்ள துரும்பூர் ஊராட்சி கீழ தெருவில் வசிப்பவர் ரவி மகன் கலியபெருமாள் (வயது 24), எம்.பி.ஏ படித்த பட்டதாரி. இவர் படித்து விட்டு வீட்டில் சும்மா இருந்து வந்துள்ளார்.இதனால் குடிப்பழக்கம் அதிகரித்து விட்டது. தினசரி குடித்து விட்டு வந்து தனது தாய், தந்தையிடம் தகராறு செய்து வருவாராம்.

  இந்நிலையில் கடந்த 19-ம் தேதி குடிபோதையில் இருந்த கலியபெருமாள் திடீரென வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து விட்டார். அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்கு பாண்டிச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலியபெருமாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×