search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை பேருந்து நிலைய கழிப்பறையில் தேங்கி நிற்கும் தண்ணீரை படத்தில் காணலாம்.
    X
    உடுமலை பேருந்து நிலைய கழிப்பறையில் தேங்கி நிற்கும் தண்ணீரை படத்தில் காணலாம்.

    உடுமலை பஸ் நிலைய கழிப்பறையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு

    தண்ணீர் அங்கேயே தேங்கி நின்று விடுவதால் உள்ளே சென்று சிறுநீர் கழிக்க செல்பவர்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
    உடுமலை:

    உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் திருப்பூர் பேருந்துகள் நிற்குமிடத்திற்கு அருகில் ஆண்கள் பொது சிறுநீர் கழிப்பறை உள்ளது. சிறுநீர் கழிப்பறையின் உள்ளே ஒரு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டியில் உள்ள நீர் சிறுநீர் கழித்ததும் சுத்தம் செய்வதற்காக உபயோகிக்கப்படுகிறது. 

    ஆனால் சிறுநீர் கழிக்க செல்லும் நபர்கள் அந்த நீரை தொட்டியில் இருந்து கையால் எடுத்து தம் கை கால்களை அலம்புகிறார்கள். அந்த தண்ணீர் வெளியே எங்கும் செல்லாமல் அந்த இடத்திலேயே தேங்கி நிற்கிறது. 

    இதனால் சிறுநீர் கழிக்க செல்பவர்கள் அந்த தண்ணீரையே மிதித்துக் கொண்டு செல்ல வேண்டியதாக உள்ளது. ஆகையால் அந்த தண்ணீர் வெளியே செல்லுமாறு பாதை அமைக்க வேண்டும். தண்ணீர் அங்கேயே தேங்கி நின்று விடுவதால் உள்ளே சென்று சிறுநீர் கழிக்க செல்பவர்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. 

    ஆகையால் உடுமலை நகராட்சி விரைவில் ஒரு தீர்வு காண வேண்டுமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×