என் மலர்

  செய்திகள்

  ரத்த அழுத்த பரிசோதனை
  X
  ரத்த அழுத்த பரிசோதனை

  மக்களை தேடி மருத்துவ திட்டம்- உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ள 4.5 லட்சம் பேருக்கு சிகிச்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டு நேற்று வரை 10 லட்சத்து 56 ஆயிரத்து 50 பேர் பயன் அடைந்துள்ளனர்.
  சென்னை:

  மக்களை தேடி மருத்துவ முகாமை கடந்த மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  இந்த திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே சென்று மருத்துவ உதவிகளை தமிழக சுகாதாரத்துறை வழங்கி வருகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், டயாலிஸ் பாதிப்பு, இயன்முறை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகிறது.

  இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை, சுயமாக டயாலிஸ் செய்து கொள்ள கருவி ஆகியவைகளை வழங்கி வருகிறார்கள்.

  இத்திட்டம் முதல் கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டு நேற்று வரை 10 லட்சத்து 56 ஆயிரத்து 50 பேர் பயன் அடைந்துள்ளனர்.

  உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்புள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும், நீரழிவு நோய் உள்ள 3 லட்சத்து 13 ஆயிரம் பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் உள்ள 2 லட்சத்து 15 ஆயிரத்து 800 பேருக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

  மேலும் 27 ஆயிரத்து 213 பேருக்கு நோய் ஆதரவு சிகிச்சையும், 50 ஆயிரத்து 500 பேருக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டது.

  இது தவிர 136 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்கு பைகள் வழங்கப்பட்டன.

  இந்த திட்டம் தொடங்கி 50 நாட்களில் 10.5 லட்சம் பேருக்கு வீடு தேடி சென்று மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

  Next Story
  ×