search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    X
    1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    வடமேற்கு திசையை நோக்கி நகரும் புயல் ஒடிசா-ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கிறது. இதையொட்டி தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு ‘குலாப்’ என பெயரிடப்பட்டுள்ளது. குலாப் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இது 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது.

    வடமேற்கு திசையை நோக்கி நகரும் புயல் ஒடிசா-ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கிறது. இதையொட்டி தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது.


    Next Story
    ×