என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பேட்டை அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை பேட்டை அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பேட்டை:

  நெல்லை சுத்தமல்லியை அடுத்த வடக்கு சங்கன்திரட்டை சோ்ந்தவா் சுப்பிரமணி (வயது 54). தொழிலாளி. இவருக்கும், கோடகநல்லூரை சோ்ந்த சுப்பிரமணி மகன் இசக்கிபாண்டி (22), அதே பகுதியை சோ்ந்த முருகன் மகன் இசக்கிபாண்டி என்ற கப்ப சிவா (26) ஆகியோருக்கும் இடையே கோவில் கொடை விழா தொடா்பாக தகராறு இருந்து வந்தது. 

  இந்நிலையில் நேற்று பழவூா் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சுப்பிரமணியை இசக்கிபாண்டி, கப்ப சிவா ஆகிய இருவரும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டா் ஜீன்குமாா் வழக்குப்பதிவு செய்து, இசக்கிபாண்டி, கப்ப சிவா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
  Next Story
  ×