search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிஷீல்டு
    X
    கோவிஷீல்டு

    குமரி மாவட்டத்திற்கு 44 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு வந்தது- பொதுமக்களுக்கு செலுத்த சிறப்பு ஏற்பாடு

    குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை 13,969 கர்ப்பிணிகளும், 12,941 பாலூட்டும் தாய்மார்களும், 52,346 இதர நோயாளிகள் என மொத்தம் 9,06,597 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 2,35,628 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

    அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து தடுப்பூசி போடப்படவில்லை.

    கோவேக்சின் தடுப்பூசி மட்டும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இன்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. நாகர்கோவிலில் வடசேரி, கிருஷ்ணன் கோவில், வட்டவிளை, தெல்லவிளை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் இதுவரை 13,969 கர்ப்பிணிகளும், 12,941 பாலூட்டும் தாய்மார்களும், 52,346 இதர நோயாளிகள் என மொத்தம் 9,06,597 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 2,35,628 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. 44 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளது. இந்த தடுப்பூசிகளை நாளை பொதுமக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களும், ஏற்கனவே முதல் டோஸ் செலுத்தி 2-வது டோஸ் செலுத்த குறிப்பிட்ட தேதி வந்தவர்களும் பக்கத்தில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×