search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தேங்கிய மழைநீரால் ஸ்தம்பித்த போக்குவரத்து - போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு

    புது பஸ் நிலையம் பின்புறம் உள்ள கந்தசாமி லே-அவுட் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சாலையில் இருந்த வாகனங்கள் தண்ணீரில் மிதந்து சென்றன.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பல்வேறு பகுதியில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. 

    இதனால் மழை பெய்யும் போது குழிகளில் குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. நேற்று பெய்த மழையால் ஈஸ்வரன் கோவில் வீதி நொய்யல் பாலம், ஊத்துக்குளி ரோடு ஒற்றை கண்பாலம், ரயில்வே சுரங்கபாலத்தில் மழைநீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    அவிநாசி ரோடு காந்திநகர் பகுதியில் மழைநீர் வடிவது தடைபட்டதால் மெயின்ரோட்டில் பெரியார் காலனி வரையிலும் வாகனங்கள் மழைநீரில் மிதந்து சென்றன. அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் 25 வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களே தண்ணீரை அகற்றினர்.

    புது பஸ் நிலையம் பின்புறம் உள்ள கந்தசாமி லே- அவுட் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சாலையில் இருந்த வாகனங்கள் தண்ணீரில் மிதந்து சென்றன. அப்பகுதியிலுள்ள அரசு பள்ளி வளாகம், மழைநீரில் மிதக்கும் பரிசல் போல மாறிவிட்டது. 

    இதேநிலை தொடர்ந்தால் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர். ஓம்சக்தி கோவில் வீதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து ஒருமணி நேரம் பாதித்தது. நெசவாளர் காலனி பள்ளி வளாகம் தாழ்வாக அமைந்துள்ளதால் நேற்றைய மழைக்கும் பள்ளி வளாகத்தில் கடல் போல் மழைநீர் தேங்கி நின்றது.

    வடகிழக்கு பருவத்தில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நிலைமை மேலும் மோசமாகும் என மக்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே தண்ணீர் தேங்காதவாறு இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×