search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாக்கடை கால்வாய்கள்  தூர்வாரப்பட்ட காட்சி.
    X
    சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்ட காட்சி.

    குமரலிங்கம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி

    சாக்கடை கால்வாய்களை தூர்வாரபடும்போது மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் செல்வது தவிர்க்கப்படும்.
    மடத்துக்குளம்:

    மழைக்காலங்களில் குடியிருப்புகளில் மழைநீர் தேங்காமலும், மழை நீரால் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கவும் மழைநீர் வடிகால்களை தூர்வார தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி குமரலிங்கம் பேரூராட்சி பகுதியில் கடந்த 20-ந்தேதி முதல் வருகிற 26-ந்தேதி வரை மழைநீர் வடிகால்கள் தூர் வாரும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை கால்வாய்களே மழைநீர் வடிகால்களாக உள்ளது.

    சாக்கடை கால்வாய்களை தூர்வாரபடும்போது மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் செல்வது தவிர்க்கப்படும். கழிவு நீர் தேங்குவது தவிர்க்கப்படுவதால் கொசு உற்பத்தி குறைந்து நோய்த் தொற்றுகள் பரவுவது தவிர்க்கப்படும். 

    குமரலிங்கம் பேரூராட்சிக்குட்பட்ட சாமராய்பட்டி, பெருமாள்புதூர், குருவக்களம் உள்பட குமரலிங்கம் பேரூராட்சி பகுதிகள் முழுவதும் தொடர்ச்சியான சுகாதாரப்பணிகள் மேற்கொள்வதால் மழைக்கால நோய்களை பெருமளவு தவிர்க்க முடியும் என்று குமரலிங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார். 
    Next Story
    ×