search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பள்ளி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

    பள்ளி மாணவ- மாணவிகள் தொற்றில் இருந்து தப்பிக்க கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
    உடுமலை:

    உடுமலை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளிச்செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பூரணி முன்னிலை வகிக்க உதவி தலைமையாசிரியர் குமரேசன் வரவேற்றார். 

    நிகழ்ச்சியில் சித்தா அரசு டாக்டர் லட்சுமிபதிராஜ், 'கொரோனாவை தடுப்போம்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது பள்ளி மாணவ- மாணவிகள் தொற்றில் இருந்து தப்பிக்க கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும். 

    கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். அதேபோல் கொரோனா தடுப்பு குறித்து சிறந்த முறையில் பதில் அளித்த 25 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதையடுத்து, அனைத்து மாணவ, மாணவியருக்கும் கபசுர குடிநீர் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மருந்தாளுனர் பெனிலா, ஆசிரியர் நாராயணன் உட்பட ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
    Next Story
    ×