என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  உள்ளாட்சி தேர்தல்- விழுப்புரத்தில் 28 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 241 பேர் வேட்பு மனுத்தாக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5088 பதவிகளுக்கு 17530 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
  விழுப்புரம்:

  தமிழகத்தில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. ஆர்வத்துடன் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

  இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில், 28  மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 241 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஒன்றிய கவுன்சிலர்களுக்கான 293 பதவிகளுக்கு 2091 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் 688 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 4138 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5088 பதவிகளுக்கு 17530 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

  விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6097 உள்ளாட்சி பிரதிநிதிகளான பதவிகளுக்கு 24 ஆயிரம் பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
  Next Story
  ×