search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடம் அங்காளம்மன் கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் தீவிரம்

    கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே அங்காளம்மன் கோவில் நிலங்கள் உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம், திருச்சி ரோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பல்வேறு சமுதாயத்தினரும், சுற்றுவட்டார கிராம மக்களும் வழிபட்டு வருகின்றனர்.

    பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பல்லடம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ளன. 

    இந்தநிலையில் கோவில் நிலங்களை மீட்கும் பணியில் அறநிலையத்துறை முழுவீச்சில் இறங்கி உள்ளது. அதன்படி அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த அளவீடு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

    இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:

    கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே அங்காளம்மன் கோவில் நிலங்கள் உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவை எங்கெங்கு உள்ளன.

    பட்டா வழங்கப்பட்ட விவரம் மற்றும் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார். அறநிலையத்துறையின் இந்த திடீர் நடவடிக்கை ஆக்கிரமிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×