என் மலர்

  செய்திகள்

  மம்தா பானர்ஜி
  X
  மம்தா பானர்ஜி

  இந்தியாவை தலிபான்கள் போன்று மாற்ற விடமாட்டோம் - மம்தா பானர்ஜி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நரேந்திரமோடி, அமித்ஷா நீங்கள் இந்தியாவை தலிபான்கள் போன்று மாற்ற நாங்கள் விடமாட்டோம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
  கொல்கத்தா:

  மேற்குவங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில், பவானிப்பூர் தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

  இந்நிலையில், பவானிப்பூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் மம்தா பானர்ஜி இன்று பேரணியில் பங்கேற்றார். அந்த பேரணிக்கு பின்னர் நடந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது, மேற்குவங்காளத்தில் துர்கா பூஜை, லெட்சுமி பூஜைக்கு நாங்கள் (திரிணாமுல் அரசு) அனுமதி அளிக்கமாட்டோம் என பாஜக பொய் கூறியுள்ளது.

  பிரதமர் மோடி - அமித்ஷா

  நரேந்திரமோடி
  , அமித்ஷா நீங்கள் இந்தியாவை தலிபான்கள் போன்று மாற்ற நாங்கள் விடமாட்டோம். இந்தியா ஒற்றுமையாகவே இருக்கும். காந்தி, நேதாஜி, விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல், குருநானக் ஜி, கவுதம புத்தர், ஜெயின்ஸ் அனைவரும் இந்தியாவில் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்தியாவை யாரேனும் பிளவுபடுத்த நாங்கள் விடமாட்டோம்’ என்றார்.

  Next Story
  ×