search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாகர்கோவிலில் காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவியை நடுரோட்டில் தாக்கிய வாலிபர் கைது

    நாகர்கோவிலில் காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவியை நடுரோட்டில் கையை பிடித்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க மாணவி நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    அந்த மாணவியை கோட்டார்கம்பளம் பகுதியை சேர்ந்த சந்துரு(வயது21) என்ற வாலிபர் பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்திருக்கிறார். ஆனால் மாணவி அவரை கண்டு கொள்ளவில்லை. மேலும் வாலிபர் தொல்லை குறித்து பெற்றோரிடமும் கூறவில்லை.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சாலையில் தனியாக நடந்துசென்ற அவரை சந்துரு தடுத்து நிறுத்தி தன்னை காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தினார். ஆனால் மாணவி அப்போதும் மறுத்துவிட்டார்.

    இதையடுத்து வாலிபர் சந்துரு, மாணவியை கையை பிடித்து இழுத்து ரகளை செய்தார். மேலும் கன்னத்தில் அடித்திருக்கிறார். பின்பு சந்துரு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

    மேலும் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். பின்பு சந்துரு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்துரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×