search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் கைது

    வேலை நிமித்தமாக சூர்யபிரகாஷ் திருப்பூர் மூலனூருக்கு வந்த போது சிறுமியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
    திருப்பூர்;

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகிறார். 

    இந்தநிலையில் சிறுமிக்கு ‘இன்ஸ்டாகிராம்‘ மூலமாக திருச்சியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் (21) என்பவர்  பழக்கமானார். இதையடுத்து இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி பழகி வந்தனர். அப்போது சூர்யபிரகாஷ் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார்.

    மேலும் வேலை நிமித்தமாக சூர்யபிரகாஷ் திருப்பூர் மூலனூருக்கு வந்தபோது சிறுமியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். 
     
    கடந்த வாரம் சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் மூலனூர் போலீசார் விசாரித்ததில் ஆசை வார்த்தை கூறி சூர்யபிரகாஷ் சிறுமியை வெளியூர் அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் சூர்யபிரகாசை ‘போக்சோ’  சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    Next Story
    ×