என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தட்டுப்பாடு - மூலப்பொருட்கள் விலை உயர்வால் தடுமாறும் தொழில்கள்
Byமாலை மலர்22 Sep 2021 8:54 AM GMT (Updated: 22 Sep 2021 8:54 AM GMT)
ஊத்துக்குளி பகுதியில் கிடைக்கும் கற்கள் தரமானவை. மேலும் இந்த கற்களை கொண்டுதான் சிலை வடிக்க முடியும். ஆனால் தற்போது கற்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட மொரட்டுபாளையம், பெரியபாளையம், கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையம், வெள்ளியம்பாளையம், நல்லகட்டிபாளையம், பெட்டிகடை, திம்ம நாயக்கன்பாளையம், சேடர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் பரம்பரை தொழிலாக நான்கு, ஐந்து தலைமுறையாக ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல், இஞ்சி, பூண்டு கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களை கொண்டு வந்து எந்திரத்தின் உதவி இன்றி சுத்தி, உளியை மட்டும் கொண்டு செதுக்கி ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிக்கப்படுகிறது. பின்னர் அம்மிக்கல், ஆட்டுக்கல் ஆகியவை கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் சாலையோரம் கடைகள் அமைத்து விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் சிறிய வருமானத்தில் தங்கள் குடும்பங்களை நடத்தி வந்தனர். ஊத்துக்குளி பகுதியில் கிடைக்கும் கற்கள் தரமானவை. மேலும் இந்த கற்களை கொண்டுதான் சிலை வடிக்க முடியும்.
ஆனால் தற்போது கற்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆட்டுக்கல், அம்மிக்கல், இஞ்சி, பூண்டு கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பாறையிலிருந்து கற்கள் கிடைக்காமல் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவர்கள் வாழ்வாதாரம் இழந்து செய்வதறியாது அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழக அரசு ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல், இஞ்சி, பூண்டு கல் தயாரிப்பை குடிசை தொழிலாக அங்கீகரித்து 10, 20 சென்ட் நிலப்பரப்பு கொண்ட பாறைகளிலிருந்து கற்களை வெட்டி எடுத்து தொழில் செய்ய உரிமம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆட்டுக்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:
பரம்பரை பரம்பரையாக இத்தொழிலை செய்து வருவதால் வேறு எந்த கைத்தொழிலும் தெரியாது. தற்போது கற்களும் கிடைக்காத நிலையில், கொரோனா தாக்கத்தால் கடந்த சில மாதங்களாக 10 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள். குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே தொழில் தொடர்ந்து நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தாராபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட சிமெண்ட் குழாய் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.
அங்கு உற்பத்தி செய்யப்படும் சிமெண்டு குழாய்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் சாலை பணிகள், குளம் அமைக்கும் பணிகள், கட்டிட பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான குழாய்கள் இங்கு தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிமெண்ட் குழாய் தயாரிக்க தேவையான அத்தியாவசிய பொருட்களான சிமெண்டு, கட்டுமான கம்பிகள், ஜல்லி கற்கள் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இத்தொழில் செய்பவாகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனா.
இதுகுறித்து தாராபுரத்தை சேர்ந்த சிமெண்ட் குழாய் உற்பத்தியாளர் சாமிநாதன் கூறியதாவது:
தாராபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிமெண்ட் குழாய் உற்பத்தி நிறுவனங்களில் தயாரிக்கப்படும் சிமெண்ட் குழாய்கள் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கொரோனா பரவல் காரணமாக இத்தொழில் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பாதிப்புக்குள்ளானது. மணல், ஜல்லி விலை உயர்வால் தொழில் நிறுவனங்கள் தற்போது நிலை தடுமாறி வருகின்றன.
சிமெண்டு மூட்டை விலை உயர்ந்து விட்டது. ஜல்லி கற்கள் விலை இரு மடங்கு உயர்ந்து உள்ளது. அதுபோன்று கட்டுமான கம்பியின் விலை டன்னுக்கு 20 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டது. மேலும் மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால் சிமெண்டு குழாய் தயாரிக்க செலவு அதிகம் ஏற்படுகிறது.
ஒரு குழாய் உற்பத்தி செய்து 28 நாட்கள் வைத்து இருந்துதான் அதனை விற்பனை செய்ய முடியும். அந்த கால இடைவெளியில் ஏற்படும் செலவுகளை உற்பத்தியாளர்கள்தான் ஏற்க வேண்டும். இவ்வாறு சிமெண்ட் குழாய் உற்பத்தியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.
இதனால் சிமெண்டு குழாய் உற்பத்தி தொழில் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளது. எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுத்து சிமெண்ட் குழாய் உற்பத்தி செய்ய தேவையான மூலப் பொருட்களான சிமெண்ட், கட்டுமான கம்பி, ஜல்லி கற்கள் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X