search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை- மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்

    விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    சென்னை:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    விவசாயிகள் முழுமையான பலன்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

    இந்தநிலையில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்கி உள்ளன.

    அண்ணா நூற்றாண்டு நூலகம்


    இந்த புதிய மின் இணைப்புக்கான ஆணைகள் விவசாயிகளுக்கு நாளை (வியாழன்) வழங்கப்பட உள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நாளை காலை 10. 30 மணிக்கு இதற்கான விழா நடைபெறுகிறது.

    விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்குவதை தொடங்கி வைக்கிறார். அதன் அடையாளமாக சில விவசாயிகளுக்கு அவர் ஆணை பத்திரங்களை வழங்குகிறார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மின்சார வாரியம் செய்து வருகிறது.

    Next Story
    ×