என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்த மாவட்டங்களில் எல்லாம் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
Byமாலை மலர்22 Sep 2021 7:03 AM GMT (Updated: 22 Sep 2021 7:03 AM GMT)
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
23.09.2021: கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
24.09.2021: விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
26.09.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 13, வாணியம்பாடி (திருப்பத்தூர்), செய்யார் (திருவண்ணாமலை) தலா 11, டி ஜி பி அலுவலகம் 10, ஆரணி (திருவண்ணாமலை), தரமணி (சென்னை), தலா 9, போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), நந்தனம் (சென்னை) தலா 8, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 7, பெரம்பூர் (சென்னை) மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு), வில்லிவாக்கம் (திருவள்ளூர்) தலா 6, சென்னை நுங்கம்பாக்கம், சென்னை விமான நிலையம் தலா 5.
குறிப்பு: வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் .

25.09.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26.09.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 13, வாணியம்பாடி (திருப்பத்தூர்), செய்யார் (திருவண்ணாமலை) தலா 11, டி ஜி பி அலுவலகம் 10, ஆரணி (திருவண்ணாமலை), தரமணி (சென்னை), தலா 9, போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), நந்தனம் (சென்னை) தலா 8, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 7, பெரம்பூர் (சென்னை) மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு), வில்லிவாக்கம் (திருவள்ளூர்) தலா 6, சென்னை நுங்கம்பாக்கம், சென்னை விமான நிலையம் தலா 5.
குறிப்பு: வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் .
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... வறுமை... 3 மாத பெண் குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்
Next Story
×