என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  திருப்பூர் சடையப்பன் கோவில் வீதியில் ஸ்மார்ட் சிட்டி பணியால் தவிக்கும் வாகன ஓட்டிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழாய்கள் முழுமையாக பதித்து தண்ணீர் சப்ளை சோதனை செய்து முடித்த பின் கான்கிரீட் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  திருப்பூர்:

  திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு சடையப்பன் கோவில் வீதியில் ‘ஸ்மார்ட் ரோடு’ அமைக்க திட்டமிட்டு பணிகள் தொடங்கியது. இதற்காக இதற்கு முன் இருந்த சாலை அகற்றப்பட்டது. சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

  இதற்காக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் இரண்டு வீதிகளை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 

  தற்போது மழை நீர் வடிகால் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சாலை போடும் பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணிக்காக அப்பகுதியில் உள்ள குழாய் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு குடிநீர் பெறுவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

  மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கூறுகையில்:

  இப்பகுதியில் 4-வது குடிநீர் திட்டத்தில் வினியோக குழாய் பதிக்கப்படுகிறது. குழாய்கள் முழுமையாக பதித்து தண்ணீர் சப்ளை சோதனை செய்து முடித்த பின் கான்கிரீட் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குழாய் பதித்த பின் கசிவு ஏற்பட்டால் கான்கிரீட் தளம் அமைத்த பின் அது சரி செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
  Next Story
  ×